< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை
|7 Aug 2023 9:43 PM IST
புதுவையில் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.