< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புனித சந்தனமாதா தேர்பவனி
|26 July 2023 11:32 PM IST
காரைக்கால் புனித சந்தனமாதா அலங்கரித்த தேர்பவனி நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் பிள்ளைத்தெருவாசலில் நூற்றாண்டுகள் பழமையான புனித சந்தனமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுத்திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, தினமும் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு சிறப்பு திருப்பலியும், மின்விளக்குகளால் அலங்கரித்த தேர்பவனியும் நடைபெற்றது.மாவட்ட முதன்மை பங்குகுரு ஜோசுவா மந்திரித்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். விழாவில், கிராம பஞ்சாயத்தார்கள்,மாதா இருதய மடத்து கன்னியர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.