< Back
புதுச்சேரி
சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Sept 2023 11:56 PM IST

புதுவை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பணி நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைத்தினர்.

புதுச்சேரி

புதுவை சுகாதாரத்துறையில் பணிபுரிந்து இறந்த மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி சுகாதார சம்மேளன சங்க சார்பில் இன்று மாலை புதுவை மிஷன் வீதி மாதா ஆலயம் எதிரே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் டேவிட் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், அங்காளம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன் சிறப்புரை ஆற்றினார். இதில் சுகாதார சம்மேளன அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன் உள்பட பலர் கலந்த கொண்டனர்.

மேலும் செய்திகள்