< Back
புதுச்சேரி
சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி

சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
7 Sept 2023 10:46 PM IST

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமன விதிகளை மாற்றவேண்டும்

காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார ஊழியர்கள் இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு புதுவை மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாத் தலைமை தாங்கினார். தலைவர் தணிகாச்சலம், செயலாளர் அமலோற்பமேரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுகாதாரத்துறையில், கடந்த பல ஆண்டுகளாக உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஆணைப்படி பணிகட்டமைப்பு, நியமன விதிகளை மாற்றி அமைக்கவேண்டும். ஊதியக்குழு சம்பள விதிகளை அமல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தொடர் போராட்டம்

தொடர்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 14-ந் தேதி அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும், 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம், 1-ந் தேதி அடுத்த கட்டமாக புதுச்சேரி தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, 28-ந் தேதி ஒருநாள் விடுப்பு எடுத்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்