< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சுகாதாரத்துறை ஊழியர்கள் தர்ணா
|1 Sept 2023 11:41 PM IST
பணிநிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் தர்ணா நடத்தினர்.
புதுச்சேரி
தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமண சாமி தலைமை தாங்கினார். தலைவர் அன்பு செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சத்திய பிரபா, லட்சுமி, ராஜேஸ்வரி, நந்தகுமார், செங்கோ, கிருஷ்ணகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், சுகாதார துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேசிய சுகாதார இயக்க ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.