< Back
புதுச்சேரி
கொசுத்தொல்லை, காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை
புதுச்சேரி

கொசுத்தொல்லை, காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
21 Sep 2023 7:09 PM GMT

கொசுத்தொல்லை, காய்ச்சல் பரவினால் அவசர உதவிக்கு 104 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி

கொசுத்தொல்லை, காய்ச்சல் பரவினால் அவசர உதவிக்கு 104 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெங்கு காய்ச்சல்

ஏடிஸ் எஜிப்ட் வகை கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்களின் ஆலோசனை பெற்று டெங்கு பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.

அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதற்கான ஏற்பாடுகளை புதுவை சுகாதாரத்துறை செய்துள்ளது.

அவசர உதவிக்கு 104

தற்போது அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பால் அவசர உதவிக்கு புதுச்சேரி அரசு 104 என்ற இலவச எண்ணை அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு கொசுத்தொல்லை அதிகமானாலோ, ஒரு பகுதியில் அதிகமான காய்ச்சல் பரவினாலோ அவசர உதவிக்காக பொதுமக்கள் இந்த எண்ணை அழைத்து உதவி கேட்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்