< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சுகாதாரத்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
|19 Jun 2023 11:25 PM IST
புதுவையில சுகாதாரத்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுவை கிராமப்புற சுகாதார ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாலை புதுவை சட்டசபை அருகே உள்ள சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மத்திய கூட்டமைப்பின் தலைவர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். செயலாளர் அன்புசெல்வன் விளக்க உரையாற்றினார். போராட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.