< Back
புதுச்சேரி
புதுச்சேரி
குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர், கவர்னர் இணைந்து தொடங்கி வைத்தனர்...!
|23 Jan 2023 8:27 PM IST
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இணைந்து தொடங்கி வைத்தனர்
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோர்ட்டிற்கு கீழ், உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார்.
இந்த திட்டத்துக்கான துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. புதிய திட்டத்தை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தில் 70ஆயிரம் பெண்கள் உதவித்தொகை பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.