< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
|29 Jun 2023 11:36 PM IST
புதுவையில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
புதுச்சேரி
புதுவையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் விதிமுறைகள் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடந்து வருகிறது. நேற்று பள்ளி துணை முதல்வர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக இடமாறுதல் பெற தகுதியான தலைமை ஆசிரியர்கள், அவர்களது பணி விவரங்கள் குறித்து பட்டியல் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.