< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
|30 July 2023 10:27 PM IST
புதுவை நெடுங்காட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டுச்சேரி
நெடுங்காட்டை அடுத்த மேல உரக்கடைத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு கொல்லைபுறத்தில் சுரேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.