டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
|புதுச்சேரி அரசின் சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதுச்சேரி
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில் புதுச்சேரி அரசின் சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார்.
ஜி.எஸ்.டி, கூட்டத்தில் புதுச்சேரி அரசின் வேண்டுகோளுக்கிணக்க ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஒரு மாநில பெஞ்ச் புதுவையில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய ஜி.எஸ்.டி. பதிவு பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகவல் பகுப்பாய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சில விண்ணப்பதாரர்கள் ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக பெறுவது பரிசார்ந்த முறையில் புதுவையில் அமல்படுத்தவும் மற்றும் இது தொடர்பான விதிகளை திருத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் அங்கீகாரம் மூலம் போலியான ஜி.எஸ்.டி. பதிவு பெறுவது மற்றும் வரி ஏய்ப்பு தடுக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தையம் மற்றும் கசினோ மீதான விரி விதிப்பு 28 சதவீதம் வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.