< Back
புதுச்சேரி
கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 Oct 2023 11:14 PM IST

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பணிநிரந்தம் செய்ய மறுக்கும் புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் சகாயராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்