< Back
புதுச்சேரி
அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
14 Sept 2023 10:02 PM IST

அரசு ஆஸ்பத்திரியில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், இன்று ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காரைக்கால் கோவில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து, சுகாதார நிலைய வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்