< Back
புதுச்சேரி
விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
புதுச்சேரி

விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு

தினத்தந்தி
|
19 Sept 2023 11:52 PM IST

புதுவையில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி

விஸ்வகர்மா தினத்தையொட்டி ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மா, தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் குமரன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் வருமாறு:-

புதுவையில் விஸ்வகர்மா தொழிலாளர்களை அடையாளம் கண்டு அதன் தொழிலாளர்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படுதல் வேண்டும். விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்த வேண்டும்.

அவர்கள் தங்களை பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தை புதுச்சேரியில் விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்