< Back
புதுச்சேரி
அரசு பள்ளி மாணவர்கள்   200 பேருக்கு நோட்டு, பேனா
புதுச்சேரி

அரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு நோட்டு, பேனா

தினத்தந்தி
|
6 Aug 2022 9:16 PM IST

முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது.

புதுச்சேரி

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்-அமைச்சருமான ரங்கசாமி பிறந்தநாள் விழா காரைக்கால் வடக்கு தொகுதி சார்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காரைக்கால் மாவட்ட என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் என்ஜினீயர் ஆனந்தன் தலைமை தாங்கினார். எம்.எம்.ஜி.நகரில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. பின்னர் காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

புளியங்கொட்டை சாலையில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு நோட்டு, பேனா, பென்சில், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சிசர் சுந்தர்ராஜன், பாரிஸ் ரவி, டாக்டர் ரவிச்சந்திரன், புருனோ, செந்தில், கணேஷ், மந்திரிகுமார், ஆனந்த், ஜேசிபி அம்புரோஸ், கல்யாணராமன் உள்பட திரளான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்