< Back
புதுச்சேரி
புதுச்சேரி
இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்
|24 Jun 2023 9:52 PM IST
அரியாங்குப்பம் அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரசு பள்ளி கல்வி துறை சார்பில் அரியாங்குப்பத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் கட்டிடமானது சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இந்தப் பள்ளியின் முன்புற மதில் சுவர் தற்போது சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனை 8 சிமெண்ட் தூண்கள் மூலம் தாங்கி பிடிக்கும் வகையில் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளியானது போக்குவரத்து மிகுந்த பாண்டி-கடலூர் பழைய பாதையில் அமைந்துள்ளது. எப்போது இடியும் என மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.