அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கக்காசு
|முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தங்கக்காசு வழங்கினார்.
காரைக்கால்,
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தங்கக்காசு வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
காரைக்காலில் இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 3 குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தலா ஒரு கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரிகள், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்னதானம்
திரு-பட்டினத்தில் என்.ஆர்.காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம், இலவச வேட்டி-சேலைகள் மற்றும் 40 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கினார்.
நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலைகளையும் வழங்கினார். நெடுங்காடு தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளிலும் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.