< Back
புதுச்சேரி
கர்ப்பிணியிடம் தங்கசங்கிலி பறித்த கல்லூரி மாணவர் கைது
புதுச்சேரி

கர்ப்பிணியிடம் தங்கசங்கிலி பறித்த கல்லூரி மாணவர் கைது

தினத்தந்தி
|
23 May 2022 10:09 PM IST

புதுவையில் கர்ப்பிணியிடம் தங்கசங்கிலி பறித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை கோவிந்தசாலை புதுநகர் பகுதியை சேர்ந்த மோகனின் உறவினரான கர்ப்பிணி அபி (வயது 28) நேற்று இரவு நடைபயிற்சி மேற்கொண்டார். அந்த வழியாக வந்த வாலிபர் அவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை பறித்துகொண்டு ஓட்டம் பிடித்தார். அவரை பொதுமக்கள் விரட்டி சென்றபோது அந்த வாலிபர் உப்பனாறு வாய்க்காலுக்குள் ஓடி பதுங்கினார். இருப்பினும் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய் ஜனார்த்தனன் ( 20) என்பது தெரியவந்தது.

நண்பர்களுடன் புதுவைக்கு சுற்றுலா வந்தபோது, தனியாக சென்ற பெண்ணிடம் போதையில் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்