< Back
புதுச்சேரி
பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளருக்கு கத்திவெட்டு
புதுச்சேரி

பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளருக்கு கத்திவெட்டு

தினத்தந்தி
|
6 July 2023 11:06 PM IST

புதுவையில் தகராறை தட்டிக்கேட்ட பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் கத்தியால் வெட்டப்பட்டார்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்தவர் லாரன்ஸ்ரொசாரியோ (வயது 32). இவர் புதுவையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் மாடியில் கமல்ராஜ் தனது குடும்பத்தோடு வாடகைக்கு வசித்து வருகிறார்.

நேற்று, தனது மனைவியிடம் கமல்ராஜ் தகராறு செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு லாரன்ஸ்ரொசாரியோவும், அவரது மனைவி புவனேஸ்வரியும் மாடிக்கு சென்று கமல்ராஜியிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கமல்ராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து லாரன்ஸ்ரொசாரியோவின் தலையில் வெட்டினார். கத்திவெட்டில் படுகாயம் அடைந்த லாரன்ஸ்ரொசாரியோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்