சிலைக்கு, மாலை அணிவித்து ரங்கசாமி மரியாதை
|அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி
அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லாஸ்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் பெரியாண்டி கலந்துகொண்டு அப்துல் கலாமின் சாதனைகள் என்ற தலைப்பில் பேசினார்.
விவாத நிகழ்ச்சி
தொடர்ந்து தொழில்நுட்பம் அமைதியான வாழ்க்கைக்கு வரமா? அல்லது சாபமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய ஆங்கிலத்துறை பேராசிரியர் ராஜவேலு தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பேசினர்.