< Back
புதுச்சேரி
காமராஜர், காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
புதுச்சேரி

காமராஜர், காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

தினத்தந்தி
|
2 Oct 2022 8:16 PM IST

காரைக்காலில் காமராஜர்,காந்தி சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.

காரைக்கால்

காமராஜர் நினைவு நாளையொட்டி, காரைக்கால் அம்பாள் சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் முகமது மன்சூர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா, காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சமாதான கமிட்டி உறுப்பினர்கள் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் சார்பில், நிரவி ,திரு.பட்டினம் தொகுதியில் காமராஜரின் நினைவு தினம் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. இதுபோல காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடியது. விழாவில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சமாதான கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து மும்மத பிரார்த்தனை, கதர் நூல் சுற்றுதல் மற்றும் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. முடிவில் சுதந்திர போராட்ட வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்