< Back
புதுச்சேரி
சுதந்திர போராட்ட தியாகி கவுரவிப்பு
புதுச்சேரி

சுதந்திர போராட்ட தியாகி கவுரவிப்பு

தினத்தந்தி
|
9 Aug 2023 9:57 PM IST

புதுவையில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகி கவுரவிக்கப்பட்டார்.

புதுச்சேரி

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு தியாகிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி முத்தியால்பேட்டையை சேர்ந்த தியாகி பஸ்தே சுப்புராயலுவை கவுரவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் அங்கவஸ்திரம் மற்றும் சால்வையை புதுவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்று துணை கலெக்டர் (வடக்கு) கந்தசாமி தியாகி பஸ்தே சுப்புராயலு வீட்டிற்கு சென்று அங்கவஸ்திரம் மற்றும் சால்வையை அணிவித்து கவுரவித்தார். அப்போது தியாகியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்