இலவச மருத்துவ முகாம்
|உப்பளத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் சரவணன், தொகுதி அ.தி.மு.க. செயலாளர் துரை, தொகுதி தலைவர் சவரிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முகாமின்போது பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண், தோல், இதயநோய், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பியல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மருத்துவ சிகிச்சை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக சர்க்கரை வழங்கப்பட்டது.