< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|9 Sept 2023 10:12 PM IST
காரைக்காலில் மாணவிகளுக்கு இலவச சைக்கிளை நாஜிம் எம்.எல்.ஏ வழங்கினார்.
காரைக்கால்
காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட காரைக்கால் நிர்மலா ராணி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாஜிம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:- மாணவ மாணவிகள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருவதற்கு இது ஒரு உந்துகோளாக இருக்கும். அரசு பள்ளிக்கு மட்டுமே வழங்கப்பட்ட இது போன்ற உதவிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நாங்கள் போராடி பெற்றுக் கொடுத்தோம். அதேபோல், முதல்-அமைச்சர் அறிவித்த மடிக்கணினி விரைவில் இப்பள்ளிக்கு கிடைக்க ஆவண செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.