< Back
புதுச்சேரி

புதுச்சேரி
பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.31 ஆயிரம் மோசடி

6 Sept 2023 10:35 PM IST
புதுவையில் ஆதார் கார்டு, கைரேகை பயன்படுத்தி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.31 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை ரெட்டியார்பாளையம் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது45). இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி அவரது வங்கி கணக்கில் இருந்து ஆதார் கார்டு, கைரேகை மூலமாக ரூ.1,000 எடுத்தார். இந்தநிலையில் இவரது வங்கி கணக்கில் இருந்து ஆதார் கார்டு, கைரேகையை மோசடியாக பயன்படுத்தி 4 தவணைகளாக ரூ.31 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த சசிகலா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் சசிகலா அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.