< Back
புதுச்சேரி
நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி
புதுச்சேரி

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
26 Aug 2023 9:46 PM IST

காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்

காரைக்காலில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நிதி நிறுவனம்

காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 32). இவர் காரைக்கால் பாரதியார் சாலையில் செயல்படும் பெர்பெக்ட் நிதி நிறுவனத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். அந்த நிதி நிறுவனத்தை கிதர்பள்ளியை சேர்ந்த மதன் என்பவர் நடத்தி வந்தார்.

புதிதாக வேலைக்கு சேர்ந்த மணிகண்டனுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக பேசப்பட்டது. ஆனால் வேலைக்கு சேர்ந்த ஒரு சில வாரத்தில், நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் டெபாசிட் செய்தால் தான் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க முடியும் என மதன் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

உரிமையாளருக்கு வலைவீச்சு

அதன்பேரில் மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கி அந்த தொகையை டெபாசிட் செய்துள்ளார். பின்னர் மணிகண்டனுக்கு 3 மாதம் வரை தலா ரூ.7 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார். அதன்பிறகு சம்பளம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து மணிகண்டன் மதனிடம் பலமுறை கேட்டும் முறையான பதில் தரவில்லையாம். இதேபோல் மதன் பலரிடம் மோசடியில் ஈடுபட்ட விவரமும் தெரியவந்தது. இதையடுத்து தான் கட்டிய பணத்தை மீட்டுத்தருமாறு, மணிகண்டன் காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளர் மதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்