< Back
புதுச்சேரி
நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி
புதுச்சேரி

நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி

தினத்தந்தி
|
14 Jun 2023 10:20 PM IST

உருளையன்பேட்டையில் நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி செய்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உருளையன்பேட்டை

உருளையன்பேட்டையில் நண்பர் நகையை திருடி அடகு வைத்து மோசடி செய்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடன் கேட்ட நண்பர்

புதுச்சேரி நெல்லித்தோப்பு அருள் படையாச்சி வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55). டெய்லர். இவருக்கும், அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வரும் பெரியார் நகரை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இளையராஜா அவரிடம் தனது அலுவலகத்தில் கேபின் அமைப்பதற்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். எனவே நாராயணசாமி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

நகையை திருடி அடகு

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி நாராயணசாமியின் கடைக்கு வந்த இளையராஜா, அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மேஜையில் இருந்த 4 கிராம் நகையை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாராயணசாமி அவரை பிடித்து விசாரித்த போது, நகையை அருகில் உள்ள வட்டிக்கடையில் ரூ.12,500க்கு அடகு வைத்ததாக கூறி அந்த ரசீதை அவரிடம் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார். ஏற்கனவே கடனாக வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நாராயணசாமி, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றார்.

மேலும் செய்திகள்