< Back
புதுச்சேரி
ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்
புதுச்சேரி

ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு தற்காலிக நிறுத்தம்

தினத்தந்தி
|
25 Sept 2023 10:44 PM IST

புதுவை பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

புதுச்சேரி

புதுவை பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வலுத்த எதிர்ப்பு

புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பாடவாரியாக 77 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களை கொண்டு நிரப்பப்பட கடந்த 8-ந் தேதி அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது, படித்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் கவுசிகன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக நிறுத்தம்

இந்தநிலையில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி தேர்வு புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இன்று நடந்தது. இதில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற் ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

இதற்கிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்யவும், புதிதாக பாடவாரியாக நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பதாக என தெரிவித்தார். உடனே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அதையடுத்து ஆசிரியர் பணியிட நேரடி தேர்வு வந்திருந்த விரிவுரையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேரடி தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்