முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு
|‘நீட்’ தேர்வு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை தொடர்ந்து முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிதாக விண்ணப்பிக்க சென்டாக் அறிவித்துள்ளது.
புதுச்சேரி
'நீட்' தேர்வு கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை தொடர்ந்து முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிதாக விண்ணப்பிக்க சென்டாக் அறிவித்துள்ளது.
புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முதுநிலை பல்மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் பொதுப்பிரிவுக்கு 272-ல் இருந்து 168 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 255-ல் இருந்து 14-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு 238-ல் இருந்து 125-ஆகவும் குறைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து சென்டாக்கில் முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2023-24-ம் கல்வி ஆண்டில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) 26-ந் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தரவரிசை பட்டியல்
மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்க்கவும். குறைக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.