மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
|மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோட்டுச்சேரி
காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மநுதினமும் (புதன்கிழமை) இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே காரைக்கால் பகுதியை சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மீனவர்கள் இந்த அறிவிப்பை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.