< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மீனவர்கள் சந்திப்பு
|20 Oct 2023 10:59 PM IST
முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
வம்பாகீரப்பாளையம்
புதுவை வம்பாகீரப்பாளையத்தில் முத்துமாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகம் தொடர்பாக மீனவர்கள் 2 பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குள் அவ்வப்போது தகராறும் நடந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கோவிலும் பூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரச்சினையை தீர்த்து கோவிலை திறப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இன்று ஒரு பிரிவு மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 100 பேர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக மற்றொரு தரப்பினருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.