< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மீனவர் வீடு சூறை; 6 பேர் மீது வழக்கு
|28 Jun 2023 11:27 PM IST
புதுவையில் மீனவர் வீட்டை சூறையாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மீனவர். இவரது மனைவி பிரேமா (வயது 40) மீன் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை கோவில் பஞ்சாயத்து நடந்தது. அன்று அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவிலில் உள்ளே புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 6 பேர் கொண்ட கும்பல் அருகில் உள்ள சந்திரன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சூறையாடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், தங்கபிரகாசம், ரஜினி, திவாகர், சுந்தரமூர்த்தி, ரஞ்சித் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.