< Back
புதுச்சேரி
படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் படுகாயம்
புதுச்சேரி

படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் படுகாயம்

தினத்தந்தி
|
27 Aug 2023 11:36 PM IST

அரியாங்குப்பம் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் படுகாயமடைந்தார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு முருகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). அவரது மனைவி ரமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜேஷ் தனக்கு சொந்தமான விசைபடகில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். அப்போது நடுக்கடலில் விசைப்படகில் இருந்து ராஜேஷ் சிறிய பைபர் படகுக்கு மாறியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படகு மோதியதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினார். சக மீனவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்