< Back
புதுச்சேரி
விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
புதுச்சேரி

விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

தினத்தந்தி
|
21 Oct 2023 10:00 PM IST

கடலுக்குள் மீன் பிடிக்க புறப்பட்டபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.

நிரவி

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகில் இருந்து தினசரி ஏராளமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

அதன்படி, வழக்கம்போல காரைக்காலை அடுத்த காசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் செந்தில்குமார் (வயது38) என்பவர், சக மீனவர்களுடன், ,இன்று காலை விசைப்படகில் ஏறி மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தயாரானார்.

தவறி விழுந்து பலி

அப்போது, படகின் ஓரத்தில் நின்றிருந்த செந்தில்குமார் எதிர்பாராதவிதமாக அருகருகே மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளுக்கிடையே தவறி கடலில் விழுந்தார். அதைப்பார்த்த சக மீனவர்கள் உடனே கடலில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேர தேடுதலுக்குப் பின், செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.

இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்