< Back
புதுச்சேரி
ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீ
புதுச்சேரி

ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீ

தினத்தந்தி
|
7 July 2023 9:49 PM IST

புதுவை ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுவை புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேசன் (வயது54). இவர் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக பிரிவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கார்த்திகேசன் தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்