< Back
புதுச்சேரி
உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.. தமிழக முதல்-அமைச்சர், கவர்னருக்கு புதுச்சேரி கவர்னர் வேண்டுகோள்
புதுச்சேரி

உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.. தமிழக முதல்-அமைச்சர், கவர்னருக்கு புதுச்சேரி கவர்னர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
31 Oct 2023 1:12 PM IST

புதுச்சேரியில் முதல்-மந்திரி, மந்திரிகளை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், முதல்-மந்திரி, மந்திரிகள், கவர்னர் என்ற இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.

எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதல்-மந்திரிக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.

மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுவை தலைமைச் செயலாளரை அழைத்து பேசினேன். முதல்-மந்திரியிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது.

முதல்-மந்திரி, மந்திரிகளை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

தமிழகத்திலும் முதல்-அமைச்சரும், கவர்னரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலுங்கானாவிலும் இதே கருத்தையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுவையில் இருக்க வேண்டும். அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்