< Back
புதுச்சேரி
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி
புதுச்சேரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

தினத்தந்தி
|
2 Aug 2023 11:08 PM IST

மணவெளி தொகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சபாநாயகர் செல்வம் நிதி உதவி வழங்கினார்.

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதி நல்லவாடு கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரின் வீடுகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ரூ.8 ஆயிரத்து 500-ம், தனது சொந்த செலவில் ரூ.5 ஆயிரத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்