< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கள உதவியாளர் தேர்வுக்கான விடைகள் வெளியீடு
|9 Oct 2023 9:42 PM IST
புதுச்சேரியில் கள உதவியாளர் பணித்தேர்வுக்கான விடைகள் வெளியீடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசின் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 30 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்வை 4 ஆயிரத்து 496 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான விடைகள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குள் தெரிவிக்கலாம் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.