< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|23 March 2023 10:22 PM IST
புதுவை லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் மனஅழுத்தத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை ராமன் நகரை சேர்ந்தவர் அபிமன்யா (வயது 41). மர சிற்பி. அவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். லட்சுமி கடந்த சில மாதங்களாக மன அழுத்ததால் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேன்று அபிமன்யா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் லட்சுமி வீட்டில் உள்ள ஊஞ்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.