< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|6 Feb 2023 12:00 AM IST
புதுவை மேஸ்தி வீதி அருகே கடும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
புதுவை மேஸ்தி வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது53).மின்துறை ஊழியர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் ரேவதி கடந்த சில தினங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை ரேவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.