< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|23 Nov 2022 9:28 PM IST
சமையலறையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி
முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி (வயது 25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அஞ்சலி சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.