< Back
புதுச்சேரி
புதுச்சேரி
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|4 Jun 2022 10:04 PM IST
காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
காரைக்கால்
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடப்பதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து இந்த கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, காரைக்கால் மாவட்டத்தை சே்ாந்த எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.