விவசாயிகள், வல்லுனர்கள் கலந்துரையாடல்
|பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் பயிற்சி மையத்தில் விவசாயிகள் வல்லுனர்கள் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது
பாகூர்
ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய, விவசாயிகள் வல்லுனர்கள் கலந்துைரயாடல் நிகழ்ச்சி, பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் பயிற்சி மையத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் பரமநாதன் வரவேற்றார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி நோக்கவுரையாற்றினார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் பூச்சியியல் துறை வல்லுனர் முனைவர் துரைசாமி 'விவசாயத்தில் அளவுக்கு அதிகமாக ரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் பயன்பாடு மற்றும் பக்க விளைவுகள்' என்ற தலைப்பிலும், புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் வல்லுனர் ரவி 'உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் உணவு பதப்படுத்தும் ரசாயனங்களினால் ஏற்படும் பின் விளைவுகள்' என்ற தலைப்பிலும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பாகூர், சேலியமேடு, கன்னியக்கோயில், கரையாம்புத்தூர், கரியமாணிக்கம், கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் வேளாண் அலுவலர் தினகரன், உதவி வேளாண் அலுவலர்கள் முத்துக்குமரன், கோபாலன், பாஸ்கரன், ஆத்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.