< Back
புதுச்சேரி
அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகள்
புதுச்சேரி

அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகள்

தினத்தந்தி
|
29 Jun 2023 11:27 PM IST

புதுவையில் அங்கன்வாடிகளுக்கு தேவையான வசதிகளை பெற்று தரப்படும் என ஆலோசனை கூட்டத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்,.

புதுச்சேரி

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியர்களுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாகவும், அங்கன்வாடியை புனரமைத்தல், மின்சாரம், தண்ணீர் பிரச்சினை, கழிவறை வசதி அனைத்தையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அப்போது தி.மு.க. அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் ராஜி, மீனவரணி விநாயகம், கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்