கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
|காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால்
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆரமுதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் டாக்டர் கமலப்பிரிய சுதாகர் ரெட்டி கண் தானத்தின் வழிமுறைகள், முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாமாக முன்வந்து கண்தானம் செய்ய பதிவு செய்து கொண்டனர்.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் வரவேற்றார். முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரவீன்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நலப்பணித்திட்ட அலுவலர் ஞானமுருகன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.