< Back
புதுச்சேரி
முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தினத்தந்தி
|
7 Aug 2023 11:05 PM IST

புதுவை பல்கலைக்கழகம் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டித்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய தேர்வு முகமை பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (கியூட்) முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளை எழுதிய தகுதிவாய்ந்தவர்கள் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை பட்ட படிப்பு மற்றும் முதுகலை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் https://www.pondiuni.edu.in/admissions-2023-24 என்ற முகவரியில் உள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை பல்கலைக்கழக கையேட்டை பார்த்து தெரிந்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடந்த 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்கும் காலக்கெடு வருகிற 10-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்