< Back
புதுச்சேரி
முந்திரி, மசாலா பொருட்கள் ஏற்றுமதி
புதுச்சேரி

முந்திரி, மசாலா பொருட்கள் ஏற்றுமதி

தினத்தந்தி
|
31 July 2023 11:09 PM IST

புதுவை துறைமுகத்தில் இருந்து முந்திரி மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுச்சேரி

துறைமுகத்தில் இருந்து முந்திரி மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதி

புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை துறைமுகத்திலிருந்து 20 கன்டெய்னர்களில் வேதிப்பொருட்கள் புதுவை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இன்று புதுவை துறைமுகத்தில் இருந்து 14 கன்டெய்னர்களில் முந்திரி, மசாலா பொருட்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் இன்று சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டன.

அவை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வேறு கப்பலில் சிங்கப்பூருக்கு எடுத்து செல்லப்படுகிறது. சமீபத்தில் பண்ருட்டி முந்திரி வியாபாரிகள் புதுவை வந்து துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரோந்து படகு

இதனிடையே சரக்குபோக்குவரத்து தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், சுங்கத்துறையினர் கடல் பகுதியில் ரோந்து செல்ல வசதியாக சுங்கத்துறைக்கு சொந்தமான ரோந்து படகு பழுது நீக்கப்பட்டு இன்று கடலில் இறக்கப்பட்டது. இதனை சுங்கத்துறை கண்காணிப்பாளர் அக்ஷய்குமார், மேரி ஸ்டெல்லா, இன்ஸ்பெக்டர் நிதின் ஜெயின் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்