< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு
|3 July 2023 11:03 PM IST
அரியாங்குப்பம் அருகே அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் மாதா கோவில் எதிரே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்டது. இந்த சுவர் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடித்து அகற்றப்பட்டது. இந்தநிலையில் பள்ளியை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் பார்வையிட்டார். அப்போது தற்காலிகமாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் அமர்தேவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்குவது, வகுப்பறைகளை மாற்று இடத்தில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் அப்பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளி கட்டிடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.