< Back
புதுச்சேரி
இளநிலை எழுத்தர் பணிக்கு நாளை தேர்வு
புதுச்சேரி

இளநிலை எழுத்தர் பணிக்கு நாளை தேர்வு

தினத்தந்தி
|
26 Aug 2023 10:28 PM IST

புதுவையில் இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வு 137 மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் நாளை நடக்கிறது.

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.), 55 பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 137 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வினை 46 ஆயிரத்து 904 பேர் எழுதுகிறார்கள். தேர்வுகள் காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடக்கிறது. தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளில் இன்று தேர்வர்களின் பதிவு எண்கள் எழுதப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வு பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் ஆலோசனை வழங்கினார். தேர்வு எழுத வருபவர்களை சோதிப்பது, அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதங்கள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஓரிரு நாட்களில் முடிவு வெளியிட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் செய்திகள்