< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாலை நேர சிறப்பு வகுப்பு
|21 Aug 2023 10:35 PM IST
நல்லாத்தூர் அரசுப்பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லாத்தூர் அரசுப்பள்ளியில், மக்கள் சேவை மையம் என்ற அமைப்பு சார்பாக, மாலை நேர இலவச சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு வகுப்பை அமைச்சா சந்திர பிரியங்கா தொடங்கிவைத்து, மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் இந்த மாலை நேர இலவச சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.